Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் முடிவு அவரது சொந்தத் தொகுதியிலிருந்து ஆரம்பம்..

rajapakshabuddhistபொதுவாக இலங்கை ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்ஷ தென் கீழ் மாகாணத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியிருப்பதாக அறிவிக்க, அதனைப் பின் தொடரும் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழ், ஆங்கில ஊடகங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாபெரும் வெற்றியீட்டியிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன.
பல ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் ராஜபக்ஷ முன்னணியில் 38 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள நிலையில் ஏனைய 17 இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன.

ராஜபக்ஷ முன்னணிக்கு 68 வீதமான வாக்குகளும் ஏனைய கட்சிகளுக்கு 32 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சரியாக இரண்டே மாதங்களின் முன்னர் நடைபெற்ற ஊவா மாகணத் தேர்தலில் ராஜபக்ஷ முன்னணி 80 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், தென்கீழ் மாகாண தேர்தலில் ராஜபக்ஷ 80 இலிருந்து 90 வீதமான வாக்குகளைப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தேர்தலின் இரண்டு வாரங்களின் முன்னர் வெளிவந்த திவயின சிங்களப் தினசரியின் ஆய்வுகளின் அடிப்படையில் ஏனய கட்சிகள் 5 வீத வாக்குகளைப் பெறுவதே சந்தேகத்திற்கிடமானது எனக் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. இந்த எதிர்வு கூறல்களுக்கு மாறாக இன்று இக்கட்சிகள் 32 வீத வாக்குகளைப் பெற்றிருப்பதானது இலங்கை அரச வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் இனியொருவிற்குத் தெரிவித்தார்.
தனது சொந்தத் தொகுதியின் பல மில்லியன்கள் செலவிலான அபிவிருத்தித் திட்டங்களை ராஜபக்ஷ மேற்கொண்டிருந்தார்.
சர்வதேச விமான நிலையக் கட்டுமானம், சர்வதேசக் கல்விநிலையம், பொது நீச்சல் தடாகங்கள், பொது விளையாட்டரங்கம், பூங்காக்கள் போன்றவற்றை நிர்மாணித்திருந்த ராஜபக்க்ஷ ஆட்சி, தமது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையே வேட்பாளர்களாகவும் நிறுத்தியிருந்தது.
ராஜபக்க்ஷ குடும்பத்தின் செல்வாக்கற்ற ஊவா மாகாணத்தில் 80 வீத வாக்குக்களைப் பெற்றுக்கொண்ட ஐக்க்ய ம்க்கள் சுதந்திர முன்னணியானது, இன்று அதே தொகுதியில் தேர்தல் நடைபெற்றால் 40 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றிருக்க முடியும் என்கிறார், தேர்தல் ஆய்வாளரான இலங்கை ஊடகவியலாளர்.

இந்த தேர்தலில் 85‐90 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெரும் என மார்தட்டிய அரசாங்கத்தினால், இலட்சக்கணக்கில் துறைமுக அனுமதிகள் வழங்கப்பட்டு, இலட்சக்கணக்கில் நிவராணங்கள் வழங்கப்பட்டு, இலட்சக்கணக்கில் நில உரிமைகள் வழங்கப்பட்டு, அரசாங்கத்தின் முழுமையான வளங்களும் பயணபடுத்தப்பட்டும் 67 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெறமுடிந்துள்ளதாக என்று குறிப்பிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ச அத்தனாயக்க தேர்தலை 5 லட்சம் மக்கள் புறக்கணித்துள்ளதாகவும் சுட்டுகிறார்.

ஆக, ராஜபக்ஷ குடும்ப ஆதிக்கமும் சர்வாதிகாரமும் சிங்கள மக்களின் வெறுப்புணர்வுக்கு உட்பட்டிருபதையே இத் தேர்தல் கோடிட்டுக் காட்டுகிறது.

Exit mobile version