Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச பிரதம விருந்தினர் : இந்தியாவின் ஒப்புதல் வாக்குமூலம்

இந்திய ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிரித்தானியாவில் வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய அரசு மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களின் “கூட்டு” அழைப்பை எற்று ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்லது. பிரித்தானிய மகாராணியின் சார்பாகக் கலந்துகொள்ளும் இளவரசர் எட்வார்ட் உடன் இணைந்து ராஜபக்ச நிகழ்வை நிறைவு செய்துவைப்பார்.

“இலங்கை அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என பலர் உணர்ந்துவருகின்றனர்” என இது குறித்து கார்டியன் செய்தி இதழுடன் பேசிய ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

2018 இல் இதே விளையாட்டுப்போட்டி நிகழ்வுகளை தனது சொந்தக் கிராமமான ஹம்பாந்தோட்டையில் நடத்த ராஜபக்ச எதிர்பார்ப்பதாக கார்டியன் மேலும் தெரிவிக்கிறது.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், ராஜபக்ச நடத்திய இனவழிப்பில் தனது பங்கையும் இந்திய அரசு மறைமுகமாக அங்கீகரிப்பதாகவே இச்செயல் அமைந்துள்ளது.

இலங்கை அரசிற்கு எதிராக இந்தியாவை நிறுத்த முனைகின்ற இந்திய அரச ஆதரவு தமிழ்த் தேசிய வாதிகளுக்கு இந்நிகழ்வு நேரடியான பதிலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசின் ஆதரவை வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற அரசியற் கட்சிகளின் சந்தர்ப்பவாதப் போக்குகள் சந்திக்கு வந்திருக்கிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன், பொதுநலவாய நாடுகள் குறித்த பிரித்தானியாவின் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

ராஜபக்ச தலைமைதாங்கும் பேரினவாத அரசுடன் இந்திய அரசு இணைந்து நடத்திய இனப்படுகொலைக்கு இது ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளது.

Exit mobile version