Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச பாசிசம் : மாணவர் ஒன்றியங்களுக்குத் தடை

பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முதல் இந்த இடைக்கால தடையுத்தரவு அமுல்படுத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிவித்துள்ளார்.

மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேராதனையிலிருந்து கொழும்பு வரையில் பாரிய பேரணி ஒன்றை நடாத்த மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கலஹா சந்தியில் மாணவர்கள் கூடி உயர்கல்வி அமைச்சருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவர் ஒன்றியங்களின் செயற்பாடுகள் பல்கலைக்கழக நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது எனத் தெரிவித்து துணைவேந்தர் சகல மாணவர் ஒன்றியங்களையும் இடைநிறுத்தியுள்ளார். மாணவர் ஒன்றிய காரியாலங்களுக்கு சீல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version