
இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் மகிந்த ராஜபக்சவே இலங்கை கிரிகட்ட அணியில் ஆளுமை செலுத்துகிறார் என முன்னை நாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுனா ரணதுங்க குற்றம் சுமத்தியிருந்தார். தெரிவுக்களுவின் தலைமைப் பதவியை மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கும் நோக்கோடு அதன் உறுப்பினர்கள் அனைவரும் ராஜபக்ச குடும்பத்தினரால் மிரட்டப்பட்டனர் என நம்பகமான மூலங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. தவிர இலங்கை தற்போது ராஜினாமா செய்துள்ள இலங்கை அணித்தலைவர் சங்கக்கார தனக்குப் பேசுவதற்கு உரிமையில்லை எனக் குறிப்பிட்டுள்ளர்.
இதே வேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழு உறுப்புனர்கள் அனைவரும் இன்று தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.
தெரிவுக்குழுவின் தலைவர் முன்னாள் துடுப்பாட்ட வீ ரர் அரவிந்த டி சில்வா தலைமையிலான குழுவே இன்று தனது இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளித்தது.
2010 மே 26ல் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் ரன்ஜித் பெர்ணான்டோ, அமல் சில்வா, அஸ்வர் அலி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.