இந்த வீடியோ ஆதாரத்தை போலியானது என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டது.
இதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை ஐ.நா.வின் தன்னிச்சையான புலனாய்வாளரும், தென்னா பிரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஹெயின்ஸ் ஆய்வு செய்தார்.
தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றம் புரிந்தது உண்மையே என்பது நிரூபணமானது.
இதுதொடர்பான ஆய்வறிக்கையை மனித உரிமைகள் கவுன்சிலிடம் ஹெயின்ஸ்ட் இன்று கையளித்தார்.