அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடும் வரை தமது அமைப்பு, ஹலாலுக்கு எதிராக ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்தும் நடத்த போவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.
மத அமைப்பாக இருந்தாலும் எந்த அமைப்புக்கு ஹலால் அல்லது வேறு சான்றிதழ்களை வழங்க அதிகாரம் இல்லை எனவும் இவ்வாறான சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு மாத்திரமே இருப்பதாகவும் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு இருக்கும் புனித உரிமைகளை ஏற்றுக்கொள்ள தமது அமைப்பு எப்போதும் தயங்க போவதில்லை எனவும் எனினும் அவர்களின் உத்தரவுகளை பின்பற்ற எந்த வகையிலும் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.