மகிந்த ராஜபக்ச தனது எதிரியான வழக்கறிஞர் ஒருவரைக் வயல்வெளியில் கொலைசெய்ததை அப்பகுதி மக்கள் கண்டதாக செய்திகள் சொல்லப்படுவதுண்டு. தமது குண்டர்படைகளின் கோட்டைக்குள் வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது துப்பாக்கிகளோடும், கற்களைக்கொண்டும், ராஜபக்ச குடும்பத்தின் குண்டர்படையினர் தாக்குதல் நடத்தினர்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை துப்பாக்கியுடன் துரத்திச் சென்றவர் அப்பகுதியின் மாகண சபை மேயர். அவரது படங்கள் நாழிதழ்களில் வெளியானவுடன் தான் வைத்திருந்தது விளையாட்டுத் துப்பாக்கி எனவும் விமான நிலையத்திற்குச் சென்ற எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்வையிடவே துப்பாக்கிகள் சகிதம் ஒடியதாகவும் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.