
இலங்கையின் இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச உலகக் கொலையாளி ஒபாமாவிற்கு வழங்கிய பரிசுப்பொருள் குறித்த விபரம் அமரிக்காவின் பெடரல் அரச ஆவணத்தில் பதிவாகியுள்ளது. மரத்தாலான பெட்டியொன்று ஆறு பகுதியாகப் பிரிக்கப்பட்டு அமரிக்க கொடியின் வடிவில் அமைக்கப்பட்டு விலைமதிப்பற்ற கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு அதனுள் கோப்பிப் பைகள் வைக்கப்பட்டு ஒபாமாவிற்கு ராஜபக்சவினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு மூங்கிலினால் செய்யப்பட்ட இருசக்கர வண்டி ஒன்றை வழங்கியுள்ளது. மேலும் பல நாடுகளின் பெயர்களும் பரிசுப் பொருட்களின் பட்டியலும் இந்த ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அமரிக்க அரசின் துணையோடு சுதந்திர சாசனம் எழுதி ஈழம் வாங்கித் தரப்போவதாக நாடுகடந்த தமிழீழ அரசு பிரச்சாரம் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
பரிசுப்பொருட்களின் முழுமையன பட்டியல்: gifts