இவர் மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு விசாரணை செய்யப்பட்டுள்ளது. ஒன்று இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டது.
மற்றயது தனது மருமகனிற்று ஆயுதம் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை வழங்கியது.
சரத்பொன்சேகா ஐனாதிபதி தேர்தலில் 1.8 மில்லியன் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட போதும் அவர் கைப்பட எழுதிய செவ்வியில் மகிந்த தனது வாக்குகளை திருடி வெற்றி ஈட்டியபோதும் தானே அதிக வாக்குகளை பெற்றவன் என்பதால் என்மீது பொறாமை கொண்டுள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் என்னை சட்டத்திற்கு முரணாக தடுத்துவைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனானும் தான் ஒருபோதும் இக்கொடுமையான ஏமாற்றுகார ஐனாதிபதியை நாட்டின் நன்மைகருதி வெளிப்படுத்துவதை கைவிடமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஐனாதிபதி ஐனாதிபதி தேர்தலில் வெற்றியை திருடியதை மக்கள் உணர்வார்கள் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது நடவடிக்கைகள் இடியமீன் போல் இருப்பதாகவும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.