பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்தேகர் கூறுகையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அண்டை நாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை கடைப்பிடித்து வந்தார். அதை தற்போது மோடி பின்பற்றுகிறார்” தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், “நாட்டின் நலன் கருதி அண்டை நாடுகளின் நல்லுறவை இந்தியா வளர்த்து வருகிறது. அதனால்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஆட்சியில் இணைந்து ஆளும் வர்க்கத்தை மாற்றுவோம் என்று தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும், கொள்கைவகுப்பாளர்களை தாஜாசெய்வோம் என்று புலம் பெயர் அரசியல் கோமாளிகளும் தமது பிழைப்பு வாத அரசியலை நியாயப்படுத்துகிறார்கள்.
இந்திய அரசியலைத் தீர்மானிப்பது பல்தேசியப் பெரு நிறுவனங்களே. அவற்றின் நலன்களுக்கு ஏற்ற வகையிலேயே அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றது, அரசியல் வாதிகளாகட்ட்டும் கொள்கை வகுப்பாளர்களாகட்டும் கோப்ரட்களினால் நியமிக்கப்படும் நிர்வாகிகள் என்பதே இன்றைய நிலை. இந்த உண்மையைப் பிழைப்ப்ய் வாதிகள் மக்களிடமிருந்து மறைப்பதனூடாக கோப்ரட்டுகளுக்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகளை நிராகரிப்பதை நியாயப்படுத்துகின்றனர்.