”இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்தியா வருமாறு தான் அழைக்கவில்லை” என்று பா.ஜ.க. மதவெறிக் கட்சியின் மூத்தத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியா வரும் ராஜபக்சவை நாங்கள் எதிர்ப்போம் என்று மாநில பா.ஜ.க. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று அறிவித்தார்.
ராஜபக்ச இந்தியாவிற்குள் வருவதை தமிழ் நாட்டின் பல கட்சிகள் எதிர்த்துவந்தன.
இந்த நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்தியா வருமாறு தான் அழைக்கவில்லை என்றும் மத்திய அரசு அழைத்ததாலேயே இந்தியா வர உள்ளார் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.