கடந்த வருடம் 8 மில்லியன் பவுண்ஸ் ஆயுதங்களை வழங்கிய பிரித்தானிய அரசு இலங்கை அரசு சோமாலிக் கடற்கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடுவதற்கு பங்களிப்பதால் இத் ஆயுதங்களுக்கு அனுமதி வழங்கியதாகத் தெரிவித்திருந்தது.
இலங்கை இராணுவ மயமாகிறது என்றும் ஆயுத விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஊடாகக் கூச்சலிடும் பிரித்தானியா இனக்கொலை அரசிற்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.
இவ்வருட ஆயுத விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்ட நாடுகளில் பெண்களின் கழுத்தறுக்கும் சவுதி அரேபியா முதலிடம் வகிக்கிறது. இஸ்ரேல், மத்திய ஆபிரிக்கா போன்ற கொலை அரசுகள் கோலோச்சும் நாடுகளுக்கும் பிரித்தானிய ‘ஜனநாயகம்’ ஆயுதங்களை வழங்க அனுமதியளித்தது.
தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் இலங்கை இராணுவத்தின் குடியிருப்பு நிலங்களாக மாறி வருகின்றன. இனச்சுத்திகரிப்பும் இராணுவக் குவிப்பும் நடைபெற்றுக்கொண்டிருக்க ராஜபக்ச்வைத் தூக்கில் போடப்போகிறோம் என்ற நாடகம் தொடர்கிறது. சிறைகள் முழுவதும் தமிழ் அரசியல் கைதிகள் மனிதப் பிணங்களாக நிரப்பப்பட்டுள்ளனர். அரை இராணுவ ஆட்சி நடத்தும் ராஜபக்ச பாசிஸ்டுக்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கும் ஆயுதங்கள் ராஜபக்சவைத் தூக்கில் போடாது. மாறாக அரியணையில் அமர்த்தி வைத்திருக்கும்.