தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததன் மூலம் இலங்கைப்பிரச்சினைக்கு மட்டுமன்றி இந்திய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 21ம் நூற்றாண்டு மிகப் பெரிய வெற்றியாக தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றியை கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு,இந்திய அரசாங்கம் அதி உயர் விருதுகளை வழங்கி கௌரவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜபக்சவிற்கு இந்திய அரசாங்கம் உயர்மட்ட விருது வழங்கி கௌரவம் செலுத்தவேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
தமிழின விரோதியும் சாதி வெறியரும் இந்துத்துவ அடிப்படைவாதியுமான சுப்பிரமணியம் சுவாமி இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (Human Rights Protection Centre-HRPC)போன்ற அமைப்புக்களுடன் கைகலப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாமி தமிழ்நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் திகதி தெளிவற்றதாக உள்ளது.