Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்சவிற்குப் பதிலாக சிறீதரன் எம்.பியும் மாவை சேனாதிராசாவும்

tna_lycaஇலங்கையில் மகிந்த ராஜபக்ச என்ற கொடூரமான இனக்கொலையாளியைப் பொது நலவாய நாடுகளின் தலைவாராக்குவதற்காக நடைபெற்ற அதன் உச்சி மாநாடு நடைபெற்றது. இலங்கைக்கு பல்தேசிய வியாபார நிறுவனங்களை அழைத்துவந்து முதலீடு என்ற பெயரில் சுரண்டலுக்கு வழி திறந்துவிடுவதற்காக அந்த மாநாட்டின் நடுவே பொது நலவாய நாடுகளின் வர்த்தப் பேரவை மாநாடும் நடைபெற்றது. பெரும் பணச்செலவில் மகிந்த ராஜபக்சவை உலக முதலாளிகளின் இலாப வெறிக்கு அறிமுகப்படுத்துவதற்காக நடைபெற்ற நடைபெற்ற வர்த்தகப் பேரவை மாநாடு லைக்கா மோபைலின் ஆதரவோடு நடைபெற்றது.

லைக்கா மோபைல் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு பொது நலவாய நாடுகளின் மாநாட்டிற்கான கோல்டன் ஸ்பொன்சராக மாறியிருந்து. லைக்கா விளம்பர பனர் பின்னால் மிளிர இனப்படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்ச முன்னாலிருந்து கைகளை உயர்த்தி பணக்காரர்களை வரவேற்கும் நிழல் படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

அன்றிலிருந்து லைகாவிற்கும் ராஜபக்சவிற்கும் இடையேயான தொடர்புகள், வியாபார பேரங்கள் அனைத்தும் தமிழ் ஊடகப் பரப்பில் வெளியாக ஆரம்பித்தன.

ஒக்ரோபர் 4ம் 5ம் திகதிகளில் ஜேர்மனியில் மீண்டும் ராஜபக்ச மாநாடு நடத்துகிறாரா என்று ஒரு தடவை பலரையும் சிந்திக்கவைத்தது. அந்த மாநாட்டு மேடையின் பின்பகுதியை லைக்கா மொபைல் நிறுவனத்தின் விளம்பரங்கள் அலங்கரித்திருந்தமையே குழப்பத்திற்கான காரணம். விளம்பரத்திலேயே கொமல்வெல்த் மாநாட்டில் எழுதப்பட்டிருந்தது போல லைக்காவின் ஆதரவில் என்றும் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் இந்தத் தடவை ராஜபக்ச இல்லை. அவருக்குப் பதிலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழரசுக் கட்சியின் ‘மாண்புமிகு’ தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெடிகுண்டு சிறீதரன் எம்.பி ஆகியோருடன் சில காவி உடைகளும் பிரசன்னமாகியிருந்தன. கத்தி படத்தையும் களியாட்டங்களையும் ஸ்பொன்சர் செய்யும் லைக்கா இந்தத் தடவை 12வது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டை ஸ்போன்சர் செய்திருந்தது. இங்கு ராஜபக்சவைப் பிரதியிட்டிருந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

புலம்பெயர் நாடுகளில் ஊடகங்கள், களியாட்டங்கள், மஞ்சள் பத்திரிகைகள், சினிமாக் கூத்துக்கள், பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புக்கள் போன்றன மட்டுமல்ல இனக்கொலையும் தமிழ்த் தேசியமும் கூட லைக்காவின் பணம் வழி நடத்துகிறது. பாவம் மக்கள்.

tna_lyca1tna_lyca2tna_lyca3

Exit mobile version