Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்சவின் வளர்ப்பு நாயான பொது பல சேனா கத்தோலிக்கர்களையும் குறிவைக்கிறது

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய
பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய

இலங்கை அரச பாசிஸ்டுக்களால் வளர்க்கப்படும் பொது பல சேனா என்ற பௌத்த நாசி அமைப்பு இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக மட்டுமல்ல கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும் தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இலங்கையின் வடக்கே மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறை மாவட்டங்களின் ஆயர்கள் இலங்கை அரசுக்கு எதிராக தேசத்துரோக நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த குற்றத்துக்காக மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு மற்றும் யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பினர் இலங்கை போலீஸாரிடம் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளனர்.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயர்கள் இருவரும் சர்வதேச சமூகத்திடம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலம் இலங்கையை அவர்கள் காட்டிக்கொடுப்பதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரர் பிபிசியிடம் கூறியுள்ளார். இலங்கை இராணுவம் பல்லாயிரக்கணக்கான மக்களை இனப்படுகொலை செய்ததாகக் கூறி, அவர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றத்தை செய்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
காவி உடைக்குள் புகுந்துள்ள பௌத்த பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டுப்படுத்துவதில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான அமைப்பாகத் தன்னை அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்திய மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்.

1. பௌத்த பாடசாலைக்களுக்குச் செல்பவர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதியில் முன்னுரிமை வழங்குதல்.

2. பாடசாலைகளில் பௌத்த பிக்குகளே வரலாறு கற்பிக்க வேண்டும்.

3. நாட்டின் பிரச்சனைகளுக்கு இன அடிப்படையில் தீர்வு முன்வைக்கக் கூடாது.

4. குடும்பக் கட்டுப்பாடு முறையை அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கக் கூடாது.

மியான்மாரிலுள்ள பௌத்தர்களான இனக்கொலையாளிகளுடன் நெருங்கிய தொடர்புவைத்திருக்கும் பொது பல சேனா, இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆதரவாளர்களான பயங்கரவாத அமைப்பாப ஆர்,எஸ்.எஸ் இற்கு ஒப்பானவர்கள்.

ராஜபக்ச போடும் எலும்புத் துண்டுக்காக இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் போலிக் கம்யூனிஸ்டுக்கள் பொது பல சேனாவிற்கு எதிராக அவ்வப்போது அறிக்கை விடுப்பதோடு நிறுத்திக்கொள்கின்றனர். சம உரிமை பேசிக் காணாமல் போன ஜே.வி.பி இலிருந்து பிளவடைந்த குழுவினர் பொது பல சேனா குறித்து மூச்சுக்கூட விட்டத்தில்லை.

சிங்கள மக்கள் மத்தியில் பொதுபல சேனாவின் நாசிக் கொள்கைகளுக்கு எதிரான பொது இயக்கம் தோன்றாவிட்டால் அது அவர்களையே அழிக்கும் நிலைக்கு வளரும்.

Exit mobile version