பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்ர. இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிக்க ஹிருணிகா கடந்தவாரம் மகிந்தவின் எதிரணி ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் துமிந்த குழுவினர் ஹிருணிக்காவிற்குக் கொலை மிரட்டல் விடுக்க அவர் சிங்கபூர் பயணமாகியுள்ளதாக உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹிருணிகா நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும் தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் நாடுதிரும்புவார் எனக் கூறியுள்ளார்.
ஹிருணிகா அவரது தாயார் சுமணா ஆகிய இருவரும் சிங்கப்பூரில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.
ராஜபக்ச பாசிஸ்டுகள் தமது எதிரிகளை அழிக்கும் வேலையை வெவ்வேறு தளங்களில் ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை ராஜபக்ச பாசிசத்தின் நம்பிக்கைகுரிய உறுப்பினர்களான மைத்திரிபால மற்றும் ராஜித செனிவரத்ன ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட எதிரணி இலங்கை பேரினவாதப் பாசிசக் கருத்தியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தத் தயாரில்லை. மக்களை அணிதிரட்டி அரசியல் மயப்படுத்துவதற்கு எதிராக போலி இடதுசாரிகள் தாமும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.