Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்சவின் நண்பர் மோடியின் ஆலோசகர்

modi_nமோடி 450 மேடைகளில் பேசி சாதனை புரிந்துள்ளார் எனத் தமிழ் நாட்டு ஊடகம் ஒன்று செய்தி எழுதி மகிழ்கிறது. பொதுவாக அனைத்துப் ஊடக வியாபாரிகளும் நரேந்திர மோடி என்ற இனப்படுகொலையாளியை ஆதரித்தன. இந்தியாவில் இதுவரை காணாத அளவிற்கு மோடி என்ற தனி நபருக்கு ஆதரவு திரட்டுவதற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனம் ஆப்கோ. அமெரிக்க நிறுவனமான ஆப்கோ குஜராத்தின் வளர்ச்சி என்ற பொய்யைக் கட்டவிழ்த்துவிடவும் அதற்கான தந்திரோபாயங்களை வகுக்கவும் மோடி குறித்து புனையப்பட்ட விம்பத்தை வழங்கவும் களமிறக்கப்பட்டது. இதற்காகச் செலவு செயப்பட்ட தொகை ஒரு நாளைக்கு 25000 டொலர்கள். இன்று நேற்றல்ல கடந்த ஏழு வருடங்களின் முன்பிருந்தே ஒவ்வொரு மாதமும் இத்தொகை செலவிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டிலிருந்து மோடியின் தாடியிலிருந்து இரத்தம் படிந்த கைகள் ஈறாக அழுக்கான பாதங்கள் வரை எவ்வாறு பராமரிப்பது என்பதைச் சொல்லிக்கொடுத்தது ஆப்கோ நிறுவனமே.
பல உலகின் சர்வாதிகாரிகளை அரசுத் தலைவர்களாக்கிய ஆப்கோவிற்கு ஹிட்லரை ஏற்றுக்க்கொள்ளும் நரேந்திர மோடியை பிரதமராக்க பணம் கொடுத்தவர்கள் பல்தேசியக் கொள்ளையர்கள். இன்று உலகைக் கொள்ளையிட பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு மோடி ராஜபக்ச போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆப்கோ நிறுவனத்தின் ஊடாக மோடியின் ஆலோசகர்களுள் ஒருவர் இலங்கையின் அமெரிக்காவிற்கான தூதராகப் பணியாற்றிய தெவிந்தா சுபசிங்க என்பவராவர். ராஜபக்சவின் நண்பரான இவர் 2008 ஆம் ஆண்டு ஆப்பிக்கோ நிறுவனத்தின் இந்தியாவிற்கான ஆலோசகரானார். இனக்கொலையாளி மோடியின் தமிழக் அடியாள் வை.கோபாலசாமி என்பது தெரிந்ததே.
தெற்காசியாவில் மன்மோகன் சிங்கை ஆட்சியில் ஏற்றிய அதே பல்தேசிய நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டொலர்களைச் செலவு செய்து மோடியை ஆட்சியேற்றுகின்றன.
ஒரு புறத்தில் மோடிக்கு எதிரானவர்கள் போல நாடகமாடிய அதே அமெரிக்க அரசே மோடியை ஆட்சிக்குக் கொண்டுவர உதவி புரிகின்றது. இதே நாடகம் ராஜபக்சவின் விடயத்திலும் நடத்தப்படுகிறது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவிலும் தெற்காசியாவிலும் போர்மேகம் சூழும். தெற்காசியாவில் இராணுவ ஆக்கிரமிப்புச் செய்யும் அமெரிக்க புதிய வெளிவிவகாரக் கொள்கை (Asia Pivot)  நிறைவேற்றப்படும்.
குஜராத்தில் இரத்த ஆறு ஓடியதைப் போன்று இந்தியாவிலும் தெற்காசியாவிலும் இரத்தம் பெருக்கெடுக்க அந்த இடைவெளிக்குள் இன்னொரு மத்தியக் கிழக்காக இந்தியா மாற்றம் பெறும்.

Exit mobile version