Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைக்கும் இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள்


இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற அமைப்பு புனர்வாழ்விற்காக ராஜபக்சவிடம் கோரிக்கைவிடுக்கவேண்டும் என்ற பத்திரிகைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களுக்கு மகிந்த ராஜப்க்ச இந்தியாவிற்கு வரும் போதுதான் நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான கோரிக்கை முன்வைக்கத் தேவையில்லை. மனிதச் சிதைப்பிற்குத் தலைமை தாங்கிய ராஜபக்சவிற்கு எதிரான உலகம் முழுவதும் போராட்டங்கள் தான் இன்று பிரதானமானது என்பதை இனப்படுகொலைக்கு எதிரானவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அமைப்பின் அறிக்கை கீழே தரப்படுகிறது:

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு (Rehabilitation) பொருண்மிய மேம்பாடு (Economic Development) அரசியற் தீர்வு (Political Settlement) நீதியிலமைந்த இணக்கப்பாடு (Justice based Reconciliation) நான்கையும் ‘ நாம்’ அமைப்பு வலியுறுத்துகிறது.
உடனடித் தேவை புனர்வாழ்வு என வரையறுக்கிறோம். அதே வேளை இந்திய மக்கள்- குறிப்பாக நல்லுள்ளம் கொண்ட தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு (Stuctural Mechanism) இல்லாதிருப்பது பெரும் குறையாயுள்ளது.

இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு ‘ ( Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்ற உயர்நிலை அமைப்பினை பரிந்துரைக்கிறோம். இருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் தமிழக முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்சமயத்தலைவர்கள் ரோட்டரி-லயன்ஸ் போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில் -வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம்.

எதிர்வரும் ஜுன் 08 ம் திகதி இலங்கை அதிபர் திரு. முகிந்த ராஜபக்சே புது டில்லி வருவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தருணம மேற் சொன்;ன பரிந்துரையை இந்தியப் பிரதமர் முன்வைத்து செயல்வடிவம் பெறச் செய்திட வேண்டுகிறோம்.
உடனடி புனர்வாழ்வு தேவைகள் என்னவென்பதை பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன. அவற்றினடிப்படையில் உடனடிப் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களாக விரிவு செய்யப்படலாம். இதற்கென மத்திய மாநில அரசுகள் ஆதார நிதியொன்றை அறிவிப்பதையும் தமிழுலகம் காலம் கருதிய நற்செயலாய் வரவேற்கும் புனர் வாழ்வு- பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளை நீதியான அரசியற் தீர்வு தான் நிரந்தர அமைதிக்கு வழி என்பதையும் வலியுறுத்துகிறோம்.

Exit mobile version