தமிழர்கள் மறுகுடியமர்த்துதல் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நான்கு நாள் பயணமான இலங்கை சென்றுள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை அதிபர் ராஜபக்சவை இன்று சந்திக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா, இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.
அதனையடுத்து இலங்கை பிரதமர் ஜெயரத்னாவை சந்தித்து பேசும் கிருஷ்ணா, பின்னர் அம்மன்தோட்டா சென்று இந்திய துணை தூதரக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.