மேலும் அவர் இதுபற்றிக் கூறுகையில் “உலகத்திலேயே கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது, இந்த அணு உலைத் திட்டம் உன்னதமானது என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள் அணு உலையில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு மட்டும் வழங்க மாட்டோம் என்று சொல்வது ஏன்? பாதுகாப்பாகத்தானே இருக்கிறது, விபத்துதான் ஏற்படாதே இழப்பீடு வழங்குவதில் ஏன் இவ்வளவு சிக்கல்? இதை யோசிக்க வேண்டும். அமெரிக்க தொழில் நுட்பமும் ஜப்பான் தொழில் நுட்பமும் சேர்ந்த அணுமின் திட்டமான புகோஷிமாவே தோல்வி எனும்போது, ரஷ்ய தொழில் நுட்பம் எப்போதுமே தோல்விதான். இது அவர்களிடம் நாம் வாங்கிய விமானங்களின் தொடர் விபத்தே எடுத்துக் கூறும்.
இதன் மூலம் மறைமுகமாக அவர்கள் தெரிவிப்பது கூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக இல்லை என்பதைத்தான் என கூறினார்.
அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதிக்குள் புடின் இந்தியா வருவதாக இருந்தது. இந்நிலையில், திடீரென அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வரும் டிசம்பர் 24ம் தேதி இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் பிரச்னை மற்றும் ரஷ்ய நிறுவனமான சிஸ்டெமாவின் ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து ஆகியவற்றால் புடின் அதிருப்தி அடைந்திருப்பதாலேயே தனது வருகையை ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.