Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரஷ்யா மீது தடைகள் விதிப்பதில் பிரான்ஸ், ஜெர்மனி தயக்கம்!

02.09.2008.
பிரஸ்ஸல்ஸ்:

ஐரோப்பிய ஒன்றியத் தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களின் அவசரக் கூட்டம், ஜார்ஜியா நிலைமை குறித்தும் உறுப்பு நாடுகளின் ரஷ்ய உறவின் எதிர்காலம் குறித்தும் விவா திப்பதற்காகக் கூடவுள்ளது.

தற்போது தலைவராக உள்ள பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். தெற்கு ஒசெட்டியாவையும் அப்காசியாவையும் ரஷ்யா சுதந்திர நாடுகளாக அங்கீக ரித்ததை இந்நாடுகள் கண்ட னம் செய்தன. ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் விதிக்க வேண்டுமென்று முன்னாள் சோவியத் குடியரசில் இருந்து பிரிந்த நாடுகள் வலி யுறுத்துகின்றன. ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இதில் தயக்கம் காட்டுகின்றன.

ரஷ்யா எதிரடி

ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தால் அதை எதிர்கொள்ள ரஷ்யா தயாராகி வருகிறது. பல ஐரோப்பிய நாடுகள் எரி சக்திக்காக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு எரிவாயு இணைப்பைத் துண்டிக்க ரஷ்யா தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியான வுடன் இவை இரண்டும் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொண்டன. ஜார் ஜியா நிலைமையில் ரஷ்யா வின் பங்கு குறித்து ஐரோப் பிய ஒன்றியம் கண்டிக்க வேண்டுமென்று இவை தற் போது கூறுகின்றன.

மாநாட்டின் விவாதப் பொருளில் பொருளாதாரத் தடை இல்லை என்று சர் கோசி கூறியதை ஸ்லோவ னியா பிரதமர் ஆதரித்துள் ளார். இதே நிலைபாட்டை செக் மற்றும் லாட்வியா பிரதமர்களும் எடுத்துள்ள னர். பிரான்ஸ், ஜெர்மனி மற் றும் ஸ்பெயின் ஆகிய நாடு கள் ரஷ்யாவுடனான வர்த் தக உறவை முறிக்க விரும்பவில்லை.

தெற்கு ஒசெட்டியா மற் றும் அப்காசியாவை ரஷ்யா அங்கீகரித்ததை ஏற்க இய லாது என்றும் ஜார்ஜியாவின் அங்கீகரிக்கப்பட்ட சர்வ தேச எல்லைக்கு அப்பால் ரஷ்யப்படைகள் வெளி யேற வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய மாநாடு தீர்மானம் நிறைவேற்றும். ஜார்ஜியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், தடை யில்லா விசா குறித்து மாநாட் டில் விவாதிக்கப்படும்.

Exit mobile version