22.08.2008.
ஜோர்ஜியாவில், தலைநகர் டிபிலிசியை கருங்கடலுடன் இணைக்கும் கிழக்கு- மேற்குப் பாதை உள்ளடங்கலான பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், அங்கு ரஷ்யா தொடர்ந்து தனது பிரசன்னத்தைப் பேணும் என்று மூத்த ரஷ்ய இராணுவ ஜெனரல் ஒருவர் கூறியுள்ளார்.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், செனெகியில் உள்ள ஜோர்ஜியாவின் முக்கிய விமானத்தளமும் அடங்கும்.
பிரிந்துபோன அப்காசியா பிராந்தியத்தைச் சுற்றவரவுள்ள பகுதிகளை ”பொறுப்புக்கான வலயம்” என்று குறிப்பிட்டுள்ள ஜெனரல் அனடோலி நொகெவிட்சின் அவர்கள், அங்கு துருப்புக்காவி வாகனங்கள் மற்றும் ஹெலிக்கொப்டர்கள் சகிதம் 2500 ரஷ்யர்கள் தங்கியிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
தெற்கு அசட்டியாவை சுற்றவரவுள்ள பாதுகாப்பு வலயங்களிலும் ரஷ்யப் பிரசன்னம் மீண்டும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.