Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெ ரிக்கா தனது கூட்டாளி நாடான ஜார் ஜியாவைப் பயன்படுத்துகிறது:வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ்.

01.09.2008.
ஜார்ஜியா விடமிருந்து சுதந்திரப் பிரகடனம் செய்த தெற்கு ஒசெட்டியாவுக்கும், அப்காசியாவுக்கும் தூதரக அங்கீ காரம் அளித்த ரஷ்யாவின் நடவ டிக்கைக்கு வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் ஆதரவு தெரி வித்தார். புதுசக்தியைப் பெற்ற ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெ ரிக்கா தனது கூட்டாளி நாடான ஜார் ஜியாவைப் பயன்படுத்துகிறது என் றும் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் சாவேஸ் கூறினார்.

இதனிடையே தெற்கு ஒசெட்டியாவில் ஜார்ஜியா நடத்திய தாக்குதல், பின்னர் நடந்த மோதல்கள் ஆகியவற்றில் அமெரிக் காவுக்கு பங்கு உண்டு என்று ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடின் மீண்டும் குற்றம் சாட்டினார்.

போரில் அமெரிக்க தலையீடு தோற்றால் அதை அமெரிக்க ஜனாதி பதி தேர்தலில் ஆளும் கட்சியின் (குடியரசுக் கட்சி) வெற்றிக்கு பயன் படுத்தலாம் என்று கணக்குப் போட் டுத்தான் இந்த விளையாட்டில் அமெரிக்கா ஈடுபட்டது என்றும் புடின் பகிரங்கமாக குற்றம் சாட் டினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலேயே புடின் இவ் வாறு கூறினார்.

பின்னர் ஜெர்மனியின் ஏஆர்டி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யிலும் இந்தக் குற்றச்சாட்டை மீண் டும் கூறினார்.

ஜார்ஜியாவில் ஏராளமான அமெரிக்க ராணுவப் பயிற்சியாளர் கள் இருக்கிறார்கள் என்பது எங் களுக்குத் தெரியும் என்றும் புடின் கூறி னார். அவர்கள் இருக்க வேண்டியது பயிற்சி மையங்களில்தான். ஆனால், அவர்கள் நுழைவதற்கு அனுமதி இல்லாத பாதுகாப்புப் பகுதிக்குள் இருந்தது கண்டறியப்பட்டது.

மூத்த அமைச்சகத் தலைமை ஏன் தங்களின் பிரஜைகளை இவ்வாறு ஊடுருவ அனுமதித்தது. ஒரு சிறிய போரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முன்கூட்டியே திட்ட மிடப்பட்ட செயல் என்றே இதை நான் கருதுகிறேன்.

யுத்தத்தில் தோற்றால் வாக்கா ளர்கள் மத்தியில் ரஷ்ய எதிர்ப்பு உணர்வைக் கிளறிவிட்டு ஆளும் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற விரும்புவதாகவும் கூறினார். இந்தக் குற்றச்சாட்டை வெள்ளை மாளிகை மறுத்தது.

சர்வதேச உறவு விஷயங்களில் ஆலோசனைகள் வழங்குவதாக கூறிக் கொண்டு மற்ற நாடுகளின் உள் விவ காரங்களில் தலையிட ‘நேட்டோ’ வுக்கு (அமெரிக்க ராணுவக் கூட் டணி) தார்மீக உரிமை இல்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

மோதலை பூதாகரமாக கிளறி விடும் நோக்கத்துடன் அமெரிக்க துணை ஜனாதிபதி டிக்செனேய் செவ்வாயன்று ஜார்ஜியா வருகிறார்.

Exit mobile version