வெளியான தகவலின் மொழியாக்கம்:
‘சட்டவிரோதக் கொலைகளுக்கும், கடத்தல் சம்பவங்களுக்கும் இலங்கையில் தீவிர தொடர்புடைய துணை இராணுவக் குழுவாக கருணா குழு உள்ளது. முன்னை நாள் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணருமான கலாநிதி விக்னேஸ்வரன் தெரிவித்த போது, தம்மைக் கொலை செய்வதற்கு கருணாவை இலங்கை அரசு கருணாவைப் பயன்படுத்தக் கூடும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சுவதாகக் கூறினார். இதே விடயத்தை கொழும்ப்புப் பகுதிப் பாராளுமன்ற உறுப்பினரும் சிவில் கண்காணிப்புக் குழு தலைவருமான மனோ கணேசனும் தெரிவித்தார். வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லீம்களும் தமிழர்களும் தமக்கு உயிராபத்து இருப்பதாக எம்மிடம் கூறினர். ஈ.பி.டி.பி செயளாளர் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் 2005 ஆம் ஆண்டு கிரிஸ்மஸ் தினத்தன்று கருணாவே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையை ஏற்பாடு செய்தார் என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கருணா குழுவின் உறுப்பினர்களே பிரபலமான பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜைக் கொலை செய்தனர் என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.’
கத்தோலிக்க மதக்ருவான அருட்தந்தை பேர்னாட், கிழக்கிலிருந்து தனது நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்திற்கு தனது நடவடிக்கைகளை கருணா விரிவுபடுத்தியுள்ளதாக் உறுதிப்படுத்தினார். 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 52 கடத்தல் சம்பவங்களை அருட்தந்தை பேர்ணாட் ஆவணப்படுத்தியுள்ளார். இவற்றிள் பெரும்பாலனவற்றிற்கு கருணா குழுவினரே பொறுப்பானவர்கள் என அவர் தெரிவித்தார்.
இத்தகவல்களை அமரிக்க பிரதி ராஜங்க செயலாளரான ரோபேர்ட் ஒ பிளேக் இலங்கைத் தூதராக இருந்த வேளையில் வாசிங்க்டனுக்கு அனுப்பிவைத்தார்.
இவ்வாறான தகவல்களை அறிந்துகொண்ட பின்னரே அமரிக்க அரசும் அதன் ஏனைய இராணுவக் கூறுகளும் இனப்படுகொலைக்குத் துணை போயுள்ளன.
தொடர்புடைய பதிவுகள்: