Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரனில் விக்ரமசிங்க இலங்கை அரசாங்கத்தின் அடியாள்

ரனில் விக்ரமசிங்க  அரசாங்கத்தின் உறுப்பினர் போன்று செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி ஐச் சேர்ந்த லால் காந்த குற்றம் சுமத்தியுள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே, ரணில் விக்ரமசிங்கவும் வகித்து வந்தார் என கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ரனில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கு அவருக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையேயான எழுதப்படாத உடன்பாடே காரணம் என்றும். ரனிலின் பலவீனங்களைப் புரிந்துகொண்ட மகிந்த அவரை தொடர்ந்தும் அந்தப் பதவியில் பாதுகாப்பதற்கான உக்திகளைக் கையாள்கிறார் என்றும் கொழும்பில் அரசியல் வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது.

Exit mobile version