இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரனில் விக்கிரமசிங்க பயன்படுத்ததப்படுவதற்காகவே வாழ்பவர். ரனில் விக்கிரமசிங்க எதிர்கக்ட்சித் தலைவராக பதவியில் தொடர்வதற்கு மகிந்த ராஜபக்ச தன்னாலான அனைத்தையும் செய்து வருகிறார். இலங்கையின் மனித உரிமை நிலைமை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கும் இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட குழுவுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு இன்று காலை கொழும்பு மாநகர முதல்வரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அமரிக்காவிற்கு இலங்கையில் என்ன தேவை என்பதை கடந்தவாரம் இலங்கைக்கான அமரிக்கத் தூதுவர் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டிருந்தார். அவர் தெளிவாகச் சொன்ன விடையம் ‘அமரிக்கா இலங்கையில் முதலிட விரும்புகிறது’