இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
ரணில் மற்றும் திஸ்ஸ ஆகியோர் எதிர்வரும் 22ம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யுமாறு மைத்திரி குணரட்ன நீதிமன்றில் கோரியுள்ளார்.
வாக்கெடுப்பிற்காக பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் , இந்த வழக்கு விசாரணை நடத்தப்படும் வரையில் ரணில் விக்ரமசிங்கவின் கட்சித் தலைமைப்பதவி இடைநிறுத்தப்பட வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.