Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரஜீவ் காந்தி கொலைச் சந்தேக நபர் கே.பியை இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயார்: இலங்கை எம்.பி

kpகுமரன் பத்மனாதன் (K.P) தொடர்பான சர்வதேச குற்றவியல் ஆதாரங்களை நிர்மூலமாக்கி அவருக்கு எதிரான சட்டபூர்வமான ஆதரங்களை மகிந்த ராஜபக்ச அழித்துவிட்டதாக ஜோன் அமரதுங்க எம்பி தெரிவித்துள்ளார். அதனால் கே.பி இற்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனால் கே.பி இற்கு எதிராக வழக்குத் தொடர முடியாமலிருப்பதாகவும் ஆனல் இந்தியா கோரிக்கை விடுத்தால் அவரை ஒப்படைக்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவிதுள்ளார்.

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் கே.பி சந்தேக நபர் என்பதால் விசாரணை என்ற பெயரில் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்திய அதிகாரவர்க்கத்தின் உள்ளே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகவே புலிகளைப் பயன்படுத்தி ரஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார் என்ற ஆதரங்கள் வெளியாகியிருந்தன. கொலை வழக்குத் தொடர்பான முன் நடவடிக்கைகளும் பணப்பரிமாற்றமும் கே.பி இன் ஊடாகவே நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன. மகிந்த ராஜபக்ச இந்தியாவைக் கட்டுப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டாக கே.பி ஐப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற அனுமானங்களும் வெளியாகியிருந்தன. இன்று புதிய இலங்கை அரசின் ஊடாக குமரன் பத்மனாதனை நாடுகடத்தி கொலை தொடர்பான ஆதாரங்களை அழிக்க இந்திய அதிகாரவர்க்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

Exit mobile version