லண்டன் செல்லவிருந்த ராஜபக்ச, ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்ற இருந்தார்.
“அதிபர் தனது திட்டங்களை மாற்றியுள்ளார்” என்று மட்டுமே இங்கிலாந்து அயல்நாட்டு அலுவலகம் பதிலை அளித்துள்ளது.
இங்கிலாந்து சட்ட விதிமுறையின் பிரகாரம், ஒருவர் போர்க்குற்றங்களையோ அல்லது மனித உரிமை மீறல்களையே இங்கிலாந்தில் செய்திருக்காவிட்டாலும் கூட, அந்நபர் அங்கு வரும்போது அவரை விசாரணை செய்வதற்கு இடமுள்ளது.
இதன் பிரகாரமே, 1998 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் சிலியன் சர்வாதிகாரி ஒகஸ்ரோ பினோசெட்டை லண்டனில் வைத்து ஸ்கொட்லாந்து யார்ட் காவல்துறை கைது செய்தது. இவர் தனது 17 வது ஆண்டு ஆட்சியின்போது ஸ்பனிஷ் மக்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.