பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் நாலாயிரம் யூரோக்களுக்கு மேல் நிரக ஊதியமாகப் பெற்றுக்கொள்பவார்களுக்கு 25 வீத வீத வரி விதிக்கப்படுகின்றது. இந்திய அரசின் வரி விதிப்பு வீத 12.36 வீதம் என்பது 10 லட்சம் ரூபாவிற்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கே விதிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் கறுப்புப்பணம் இந்தியாவுடன் ஒப்பிடும் போது புறக்கணிக்கத்தக்கது.
இந்த நிலையில் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 12.36 வீத வரி விதிக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தும் நடிகர்களின் மத்தியில் காப்ரட் நடிகர்களில் ஒருவரான ரஜனிகாந் வரிவிதித்தால் பணப்பதுக்கல் அதிகரிக்கும் என மிரட்டியுள்ளார்.
இவர்கள் போராடுவது பால்கட்டண உயர்வுக்காகவோ, பஸ்கட்டண உயர்வுக்காகவோ அல்ல. அபரிமிதமான தமது உழைப்பைப் பதுக்கிக் கொள்வதற்காக மட்டுமே.
தென்னிந்தியாவில் மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் தென்னிந்திய சினிமாக் குப்பைகள் புலம் பெயர் நாடுகளிலும் கோடிகளாக பணம் சேர்த்துக்கொள்கின்றன. இவர்கள் இந்திய ஏழைகளின் வாழ்வை மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் வாழ்வையும் சுர|ண்டியே பணத்தைப் பதுக்கிக் கொள்கின்றனர்.