அணுமின் உற்பத்திக்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவிற்கு விற்க முடியாது என்று ஆஸ்ட்ரேலியா கூறியுள்ளது.
3 நாள் பயணமாக ஆஸ்ட்ரேலியா சென்றுள்ள இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் மார்டின் பெர்குசரை சந்தித்து பேசினார்.
இந்தியாவிற்கு யுரேனியத்தை விற்பதில்லை என்ற திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறு அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆஸ்ட்ரேலியா அமைச்சர், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு மட்டுமே யுரேனியத்தை விற்போம் என்ற தங்களது கொள்கையில் உறுதி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்ட்ரேலியாவிற்கான இந்திய தூதர் சுஜாதா சிங், இந்திய மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட இருநாடுகளின் முக்கிய பிரச்சனைகள் குறித்து அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விவாதிக்க இருப்பதாக கூறினார்.