Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘யுத் அபியாஸ்’ “இந்தியாவின் போருக்குத் தயாராகுங்கள்” பயிற்சி!

IND26137Bஇந்திய இராணுவத்தினரும் அமெரிக்க இராணுவத்தினரும் 18 இராணுவ பயிர்ச்சியை இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய -அமெரிக்க ராணுவத்தினர் உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் இரு நாடுகளின் போர் விமானங்கள், டாங்கிகள், விமானியில்லா உளவு விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.உத்தரப் பிரதேசத்தின் பாபினா பகுதியில் இந்த பயிற்சி நடக்கிறது. 18 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சிக்கு ‘யுத் அபியாஸ்‘ (போருக்கு தயாராகுங்கள்) என்று பெயரிடப்பட்டுள்ளது.கடந்த வாரம் ஆக்ராவில் இரு நாட்டு விமானப் படைகளும் கூட்டுப் பயி்ற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாற்பதாயிரம் படை வீரர்களுடன் இந்திய இராணுவம் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான முழு அளவிலான போரை நடத்தி வருகிறது. இப்போரால் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அமெரிக்க இராணுவப் பயிர்ச்சி தொடர்பாக பல் சர்ச்சைகளும் எழுந்துள்ளன. அமெரிக்க வீர்கள் வெறும் பயிர்ச்சியில் மட்டும்தான் ஈடுபடுகிறார்களா? அல்லது மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்படுகிறார்களா? என்பதுதான் அந்தக் கேள்வி

Exit mobile version