Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’!

03.11.2008.

யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! – ஈஸ்ற்ஹாம் பிரதான வீதியில் ‘வேட்டையாடு விளையாடு’ : த ஜெயபாலன்.

வன்னியில் முடக்கி விடப்பட்டுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களின் சொல்லொனாத் துயரங்களை வெளிக்கொணரும் வேட்டையாடு விளையாடு வீதி நாடகம் இன்று (நவம்பர் 2) லண்டனில் ஹை ஸ்ற் நோத், ஈஸ்ற்ஹாமில் நிகழ்த்தப்பட்டது.  ‘வேட்டையாடு விளையாடு’ என்ற தலைப்பில் நிகழ்த்தப்பட்ட இவ்வீதி நாடகத்தில் 20க்கும் மேற்பட்ட தேசம் நண்பர்கள் பங்கெடுத்தனர். கலை கலைக்காக மட்டுமல்ல மக்களுக்காக என்பதை இந்நிகழ்வு இடித்துரைத்து உள்ளது. யுத்தத்தை நிறுத்துங்கள்!! வன்னி மக்களை விடுவியுங்கள்!!! என்ற கோசம் பிரதானமாக வைக்கப்பட்டது. தமிழிலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் கோசங்கள் மாறி மாறி எழுப்பப்பட்டது. தமிழர்களின் கோட்டையான ஈஸ்ற்ஹாமில் இருந்து வன்னி மக்களுக்கான குரல் எழுப்பப்பட்டு இருப்பதற்காக தான் பெருமைப்படுவதாக நியூஹாம் துணை மேயர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வு தொடர்பாக வழங்கிய சிறிய அறிமுகத்தில் குறிப்பிட்டார்.

இன்று வன்னி மக்கள் படும் அவலம் மிக மோசமானது. சர்வதேச உதவி நிறுவனங்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்ட நிலையில் மிக மோசமான மனித அவலத்தை மக்கள் எதிர் நோக்கி உள்ளனர். ஒரு புறம் இலங்கைப் படைகள் ஆகாய மார்க்கமாகவும் தரைவழியாகவும் தாக்குதலை நடத்துகிறார்கள். பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள விடுதலைப் புலிகள் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறார்கள். இந்த யுத்த விளையாட்டில் அகப்பட்டுள்ள மக்களின் அவலங்கைளை ‘வேட்டையாடு விளையாடு’ என்ற தலைப்பில் எளிய கலைவடிவத்தின் மூலம்  நாடகம் மற்றும் கலை அனுபவம் எதுவும் இல்லாதவர்கள் நிகழ்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. மக்களுக்கான கலைகளுக்கு அனுபவம் அவசியம் அல்ல. அம்மக்கள் மீதான கரிசனையே போதும் என்பதை இந்நிகழ்வில் கலந்துகொண்ட புலம்பெயர் சூழலிலேயே பிறந்து வளர்ந்த சிறார்களின் பங்குபற்றுதலும் அவர்களது உணர்வும் வெளிப்படுத்தி இருந்தது.

மேலும்….

http://thesamnet.co.uk/?p=4040

 

Exit mobile version