படையினர் மற்றும் மக்கள் மத்தியில் யுத்தத்திற்கு ஆதரவு உள்ள நிலையில் யுத்தத்திற்கு எதிரான கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல யோசனை தெரிவித்துள்ளார். அவ்வாறு கருத்துக்களைக் கூறுவது தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் சரியாக மேற்கொள்ளப்படுகிறது என படையினர் மற்றும் மக்கள் மத்தியில் அபிப்பிராயமுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை கூட்டத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கட்சி என்ற வகையில் யுத்தம் தொடர்பில் கொள்கை ரீதியாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒருபோதும் யுத்தத்திற்கு எதிராக பேசமுடியாது என்றும் கிரியல்ல கூறியுள்ளார். கட்சியின் தலைவர் தான் இல்லை எனவும் தலைவராக இருந்தால் கூறவேண்டியதை தான் அறிவதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார். எவ்வாறயினும் இவ்வாறான கருத்துக்களை கட்சியின் தலைவரால் மாத்திரமே தெரிவிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.