Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விசேட பொறிமுறை : பிரேம்குமார்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் விசேட பொறிமுறைமையொன்றை தமது கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் மட்டுமன்றி 1948ம் ஆண்டின் பின்னர் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சக்திகள் உத்தரவிற்கு அடிபணியாத வகையில் உள்நாட்டு ரீதியான யுத்தக் குற்றச் செயல் விசாரணைப் பொறிமுறைமையொன்று நிறுவப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

யுத்த வெற்றியை துருப்புச் சீட்டாக பயன்படுத்தியே அரசாங்கம் தேர்தல்களில் வெற்றியீட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சமாதானம் நிறுவப்பட்டுள்ளதாக கூறிக் கொள்ளும் அரசாங்கமே புலிகள் பற்றிய அச்சத்தையும் வெளியிட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடவும் மக்களை பீதியில் ஆழ்த்தவும் விடுதலைப் புலி அச்சத்தை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version