Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் மாவட்ட எம்பிக்கள் தொகை குறைக்கப்படுவது இடைநிறுத்தப்படவேண்டும் : மனோ கணேசன்

யாழ் மாவட்டத்தின் எம்பிக்கள் தொகைஒன்பதிலிருந்து 5 ஆக குறைக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதற்கானஅதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு இருந்தாலும்கூட, இதன் பின்னணி அரசியல் அடிப்படைகொண்டதாகும். எனவே அரசியல் ரீதியான தீர்வு காணப்படும் வரை இந்நடவடிக்கை இடைநிறுத்தப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ் மாவட்டத்தில் 2009 வரை 816,005வாக்காளாகள் பதிவாகி இருந்தனர். இதில் 331,214 பெயர்கள் அகற்றப்பட்டு, தற்போதைய2010ம் வருட பதிவில் 484,791 எஞ்சியுள்ளன. இந்த அடிப்படையிலேயே எம்பிகளின்தொகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் யாழ் மாவட்ட பதிவிலிருந்துகுறைக்கப்பட்ட சுமார் 330,000 பேரில் ஒரு தொகையினர் வெளிநாடு சென்றுவிட்டதாகவும்,பிறிதொரு தொகையினர் மேல்மாகாணத்திற்கு குடிபெயர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.நாட்டைவிட்டு தமிழர்கள் வெளியேறி உள்ளமைக்கு போரும், தேசிய இனப்பிரச்சினையும் பாரியகாரணங்களாக அமைந்திருக்கின்றன. இன்று வெளிநாடுகளில் குடியேறியுள்ள அனைவருமே அவ்வந்தநாடுகளின் குடியுரிமை பெற்றுவிட்டார்கள் என்றுகூற முடியாது. அத்துடன் சுமார் 1 இலட்சம் இலங்கையர்தமிழ் நாட்டிலே அகதிகளாக இருக்கின்றார்கள். அத்துடன் வழமையிலிருந்த இரட்டைகுடியுரிமை முறைமையையும் தற்சமயம் அரசியல் நோக்கத்துடன் கடுமையாக்கப்பட்டுள்ளது. இவைஅனைத்தும் தேசிய இனப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவையாகும். எனவே தேசியஇனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை இந்நடவடிக்கை ஒத்திவைக்கப்படவேண்டும்.இவ்விவகாரம் அரசிற்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்விவாதிக்கப்படவேண்டும்.

மேல்மாகாணத்திற்கு குடிபெயர்ந்த அனைவரும்கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் புதிய பதிவுகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள் என்றுகருதப்படுவதும் தவறாகும். ஒரு சிறுதொகையினரே இவ்விதம் புதிய பதிவுகளை பெற்றுள்ளனர். கடந்த10 வருடங்களாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் உள்ள தமிழ் வாக்காளர்கள் தொகையில்இயற்கையான அதிகரிப்பு மாத்திரமே காணப்படுகின்றது.

உண்மையில் தேசிய ரீதியாக சனத்தொகையில் 69விகிதமானவர்கள் வாக்காளர்கள். அந்த அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற 3இலட்சம் தமிழர்களில், 2 இலட்சம் தமிழ் வாக்காளர்கள் இருக்கவேண்டும். கம்பஹாமாவட்டத்தில் வாழ்கின்ற 1 இலட்சம் தமிழர்களில், சுமார் 70 ஆயிரம் தமிழ்வாக்காளர்கள் இருக்கவேண்டும். இந்தளவிற்கு தமிழ் வாக்காளர்கள் இங்கே இல்லையென்று தேர்தல்ஆணையாளருக்கு தெரியும். இதுபற்றிய தகவல்களை அவருக்கு நான் வழங்கியுள்ளேன். இது வாக்காளர்களைவருடா, வருடம் பதிவு செய்யும் முறைமையில் உள்ள குளறுபடியாகும். ஆகவே இத்தகையகுளறுபடிகளுக்கெல்லாம். தீர்வு காணப்படும் வரை இந்நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படவேண்டும். இது சம்பந்தமாக தமிழ் அரசியல் கட்சிகளினதும், தேர்தல் கண்காணிப்பாளர்களின்நிறுவனங்களினதும் விசேட மாநாட்டை தேர்தல் ஆணையாளர் நடத்தவேண்டும்.

Exit mobile version