Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் மாவட்ட்த்தில் நிலங்களைப் பறிப்போம் : ஹத்துருசிங்க அறிவிக்கிறார்

hathurusinhaபலாலி, மயிலிட்டி, காங்கேசன் துறை ஆகிய இடங்களில் பலாலி விமானத்தளத்தை விரிவாக்கம் செய்வதற்காகவும், காங்கேசன் துறை உள்ள துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கை ஆகியவற்றிக்காக பொது மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜனர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படும் பொது மக்களின் காணிகளுக்கு நஷ்ட ஈடு அல்லது வேறு இடங்களினில் காணிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பேரினவாதப் பாசிஸ்டுக்களின் இராணுவக் கூலியான ‘கட்டளைத் தளபதி’க்கும் பொதுமக்களுக்கும் என்ன தொடர்பு என்பதை கேட்பதற்குக் கூட அரசியல் தலைமை அற்றுப்போன நிலையில் இலங்கை அரசின் நிலப்பறிப்பு திட்டமிட்டு நடத்தப்படுகின்றது.
நிலப்பறிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் எதிர்த்துக் குரலெழுப்பும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தன்னாட்சியை வலியுறுத்துவோரை புலிப் பினாமிகள் எனக் காட்டிக்கொடுக்கும் புலம் பெயர் அரச ஆதரவுக்குழு ஒன்று நிறுவனமாகி வருகிறது. இலங்கை அரச பாசிசத்தின் ஒடுக்கு முறைக்கு எதிரான உலகின் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைவு அவசியமானது.

Exit mobile version