Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் மாவட்டக் குற்றச் செயல்களுக்கு புலிகளே பொறுப்பு : ஈ.பி.டி.பி

யாழ் மாவட்டத்தில் எதிர்ப்பு சக்திகளை முறியடிக்கும் நோக்கிலும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவும் இலங்கை அரசபடைகளும் அவற்றின் துணைக்குழுக்களும் குற்றச் செயல்களையும் சமூகவிரோத நடவடிக்கைகளையும் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஈ.பி.டிபி அமைப்பு இச்செயல்கள் குறித்து அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் படுகொலைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்ற சம்பவங்களுக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் தொடர்பில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளே இதனை மேற்கொள்வதாகவும் யாழ்;ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், சில உறுப்பினர்கள் இன்னமும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பேரை ஈ.பி.டி.பி.யினர் படுகொலை செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கும் ஈ.பி.டி.பி. கட்சிக்கும் தற்போது எவ்வித தொடர்புகளும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அச்ச சூழ்நிலையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் நெருக்கடி நிலைக்கு தள்ள தமது கட்சி முயற்சிக்கவில்லை என ஈ.பி.டி.பி அறிவித்துள்ளது.

Exit mobile version