Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்.பொது நூலக சம்பவம் தொடர்பாக நூலகரின் அறிக்கை

கடந்த 23 ஆம் திகதி யாழ். பொது நூலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தென்னிலங்கைச் சிங்கள சுற்றுலாப் பயணிகள் புரிந்த அடாவடித்தனங்களைப் பற்றி யாழ்.பொது நூலக நூலகர், நூலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அறிக்கையொன்றைச் சமர்ப்பித்திருக்கிறார்.
இவ்வறிக்கையில், இடம் பெற்ற சம்வங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளதுடன், நூலகத்தில் நடைபெற்ற அடாவடித்தனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலகரின் அறிக்கையில்

‘ இதற்கிடையில் மாலை 5.20 மணியளவில் இராணுவ அதிகாரி கதவைத் திறந்து அனைவரையும் உள்ளே விட்டார். 37 பஸ் வண்டிகளில் வந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஒரே தடவையில் தங்களது மூட்டை முடிச்சுகளுடன் நூலகத்தினுள் நுழைந்தனர். உத்தியோகத்தர் எவரும் விலக முடியாது திண்டாடினார்கள். அதே வேளை சுற்றுலாப் பயணிகள் பலர் அதிகளவு மதுபோதையில் இருந்தார்கள். அவர்கள் ராக்கைகளிலிருந்த நூல்களையெல்லாம் அலங்கோலப்படுத்தினார்கள். சிலர் தூக்கி நிலத்தில் வீசினார்கள். பணியாளர் வீச வேண்டாமெனத் தெரிவித்த போதும் அவர்களைக் கடுமையாக விமர்சித்ததுடன் தொடர்ந்தும் நூல்களை அலங்கோலப்படுத்தினார்கள். சில சுற்றுலாப் பயணிகள் பெண் உத்தியோகத்தர்களுடன் சேஷ்டைகளிலும் ஈடுபட்டனர். இரவு 7 மணிவரை சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே வேளை கலந்துரையாடலில் இராணுவப் பொலிஸ் அதிகாரிகள் இதனை மறுத்ததுடன் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறவில்லை என்றும், குடாநாட்டுப் பத்திரிகைகள் இனவாதத்தைத் தூண்டும் விதமாக எழுதுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version