யாழ். பாடசாலை மாணவர்கள் ஹெரோயின் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த தகவலின் அடிப்படையில் யாழ். நகரில் உள்ள வீடொன்றில் வைத்து 8 மாணவர்களை யாழ். காவற்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இம் மாணவர்கள் 10 பேரும் ஆரம்ப விசாரணைகளின் பின் யாழ். மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன் போது ஐந்து மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் ஏனைய 5 மாணவர்களும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சவலாக குடும்ப கூட்டமைப்பு அரசியல் அமைந்துள்ளதாகவும் இந்த நிலைமை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.