Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் பல்லைக்கழகத்தில் இன்று நடைபெற்ற அமைதிப் போராட்டம்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தியும், அண்மைக்காலமாக பல்கலைக்கழ நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழ விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள், யாழ்.பலர்கலைக்கழ ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ‘பல்கலைக்கழகம் என்ன கோமாளிகளின் கூடமா? மாணவர்கள் சிறையில் நிர்வாகம் விடுமுறையில்’ போன்ற சுலோக அட்iடைகளைப் போராட்டத்தில் பங்குபற்றியவர்கள் தாங்கியிருந்தனர்.
பல்கலைக்கழக சூழலில் கடந்த நவம்பர் 27,28 ஆம் திகதிகளில் இடம்பெற்ற விரும்பத்தகாத வண்முறைகளையும், ஆயுத அடக்கு முறையையும் வன்மையாகக் கண்டித்த விஞ்ஞான ஆசிரியர்கள் சங்கம், அப்பாவி மாணவர்கள் மீது திட்டமிட்டுப் பழிகள் சுமத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியது.சிறீ ரெலோ என்ற அரச துணைக்குழு ஒன்றின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதான போலிக் குற்றச்சாட்டைக் கண்டிதது.

Exit mobile version