மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் இரண்டு மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதுடன் சில மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இன்னமும் விசாரணை நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அரசாங்கம் மௌனம் காத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களை பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிமையற்ற நிலைமை காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை கடந்த சனி 06.11.2011 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களின் பழைய மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் சில முன்னை நாள் மாணவர்கள் லண்டனில் ஒன்று கூடல் ஒன்றை நடத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் எதிர் நோக்கும் பாதுகாப்பற்ற சூழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும், இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் “அரசியல் பேச வேண்டாம்” என அதனை மறுத்துள்ளனர்.
இக்கருத்தை முன்வைத்தமையால் அவர்களுக்கு அரசியல் உள் நோக்கம் இருக்கலாம் என பரவலாகக் கருத்து நிலவுகிறது.