யாழ்ப்பாணம் – தொண்டமானாறு செல்வசந்நிதி ஆலய வீதியில் வைத்து படையினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர் தொண்டாமானாற்றைச்சேர்ந்த அரியரத்தினம் அருள்தாஸ் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடைக்கு சென்ற தமது மகன் படையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இருப்பதாக பொதுமக்கள் கூறியதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற போது படுகாயமடைந்த நிலையில் தமது மகன் வீதியில் விழுந்து கிடந்ததாக அம்மாணவனின் தந்தை அரியரத்தினம் தெரிவித்துள்ளார்.