Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ் – கொழும்ம்பு புகையிரதத்தில் வெடிபொருட்கள் : இலங்கை அரசின் செயல்?

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைச் சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்பட்ட போது இருக்கை ஒன்றின் கீழ் இருந்த இந்தக் குண்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவே குண்டு கண்டெடுக்கப்பட்டது. குண்டு இருந்த பொதிக்கு யாரும் உரிமை கோராததை அடுத்து பஸ்ஸில் பயணம் செய்த 38 பயணிகளும் படையினரால் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த பையிலிருந்து 3 டெற்றனேற்றர்கள், 300 கிராம் கன் பவுடர், 24 ரவைகள் மற்றும் வெடிபொருள் கொள்கலன் ஒன்று என்பவற்றைப் படையினர் கண்டெடுத்தனர்.
எனக் குறிப்பிடுகின்றன.  வடகிழக்கை இராணுவ மயப்படுத்தும்நோக்கோடு இலங்கை அரசு இவ்வாறான அச்சப் புரளிகளைக உருவாக்கியிருக்கலாமோ என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version