Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுக்கு விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என கோரியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சில காலமாக பாதுகாப்புப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளர் பரமலிங்கம் தர்சாந்த் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் பாரதூரமாக தாக்கப்பட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே வேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் காலவரையின்றி வகுப்புக்களைப் பகிஸ்கரிப்பதாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version