செல்வதீபனை அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியதை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்திருக்கின்றது.
அவரைத் தாக்கியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், யாழ் செய்தியாளர்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரியிருக்கின்றது.
வடமராட்சி பிரதேசத்தின் செய்தியாளராக வீரகேசரி மற்றும் தினக்குரல் ஆகிய பத்திரிகைகளுக்கு அவர் பணியாற்றி வருகின்றார்.
மகிந்த பாசிச அரசும் அதன் துணைக்குழுக்களும் நூற்றுக்கணக்கான தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும் கொலை செய்தும் உள்ளன. இவ்வாறான
தமது மோட்டார் சைக்கிளில் விளக்குகளை அணைத்துவிட்டு அவரை பின் தொடர்ந்த நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தன்னை அடையாளம் கண்டிருக்கலாமென செல்வதீபன் தெரிவிக்கின்றார். தான் தன்னை வெளிப்படுத்த முன்பதாக தாக்குதல் நடந்ததாகவும் சுதாகரித்துக்கொண்டு ஆட்கள் அற்ற அப்பகுதியினிலுள்ள பற்றைகளினுடாக தப்பி செல்ல முற்பட்ட போதும் அவர்கள் துரத்தி துரத்தி கொலை செய்யும் பாணியினில் தாக்கியுள்ளனர். தினக்குரல் வலம்புரி மற்றும் வீரகேசரி பத்திரிகைகளிற்காக அவர் பணியாற்றியிருந்தார்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் வைத்து முன்னர் காணாமல் போயிருக்கும் தனது சகோதரன் தொடர்பாக தனது தாயாருடன் இணைந்து செல்வதீபன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றிடம் சாட்சியமளித்துள்ளார்.