Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாண இளையோர் இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்படுவார்களா:கட்டளைத் தளபதியின் வாக்குமூலத்தின் பின்னால்..

யாழ். மாவட்­டத்தில் உயர் பாது­காப்பு வலயம் என்ற ஒரு இடம் இல்லை. மக்­க­ளு­டைய காணிகள் uthaya pereraபடிப்­ப­டி­யாக அவர்­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கப்­படும் என யாழ். மாவட்ட இரா­ணுவக் கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரி­வித்தார்.
இதே­வேளைஇ யாழ் மாவட்ட இளைஞர் யுவ­தி­க­ளையும் விரைவில் இரா­ணு­வத்தில் இணைத்துக் கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊதிப்பெருத்து வீக்கமடைந்துள்ள இலங்கை பாசிச அரச இராணுவத்திற்கு எதற்காக இன்னும் ஆட்பலம் என்பது ஒரு புறமிருக்க தமிழ் இளையோர் இலங்கை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுவார்களா என்ற சந்தேகங்களை தோன்றுகின்றன. இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாகக் கூறும் இலங்கை அரசு இராணுவதின் நிரந்தர வதிவிடமாக வடக்கும் கிழக்கும் மாறியுள்ளது. பல்தேசிய மயமாக்கப்படும் கோத்தாபயவின் இராணுவத்திற்கான பொருளாதார வலையமாக மாற்றப்படும் வடக்கும் கிழக்கும் மக்களை இருண்ட வாழ்விற்குப் பழக்கப்படுத்துகிறது.
இலங்கையில் அன்னிய நலனின் முகவரான பேரினவாத பாசிச அரசுகளின் இராணுவம் அழிவின் விழிம்பிற்கு முழுச் சமூகத்தையும் இழுத்து வந்திருக்கிறது. மகிந்த ராஜபக்ச அரசிற்கு எதிரான போராட்டம் பிழைப்புவாதிகளின் கைகளிலிருந்து பறித்தெடுக்கப்பட்டு மக்கள் சார்ந்த அரசியலாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

Exit mobile version