Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் பதாளக் குழுக்கள் : படையினரின் கண்டுபிடிப்பு

யாழ்.மாவட்டத்தில் பாதாள உலக கும்பல் ஒன்று இருப்பது போன்றும் அதுவே இதுவரை நடந்த கடத்தல்கள் கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டவர்களென கூறி Jaffna-policeஅனைத்தினையும் மூடி மறைக்க இலங்கை அரசு புதிய நாடகமொன்றை அரங்கேற்ற தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை அரச தகவல்களின் அடிப்படையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 134000 இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். ஏறக்குறைய ஆறு இலட்சம் மக்கள் தொகை என அரச கணிப்புக்கள் கூறுகின்றன. ஆக 45 பேருக்கு ஒரு இராணுவமும், இது தவிர உளவுப் படைகளும் போலிஸ் படைகளும் நிறைந்துள்ள இராணுவத் தொழிற்சாலையாக யாழ்ப்பாணம் காணப்படுகிறது.
இவ்வாறான இராணுவ மண்ணிலிருந்து பாதாளக் குழுக்களை இராணுவமெ கட்டவிழ்த்து விட்டிருக்க்கலாம் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

“ஹவா குரூப்” என்ற பாதாள உலகக் குழுவினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேர் அடங்குவதாகவும் இக்குழுவுக்கு குமரேசன் வினோதன் என்ற இளைஞரே தலைமை தாங்கியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பாதாள உலகக் குழு ஒன்றை கோப்பாய் மற்றும் அச்சுவேலிப் பொலிசார் கைது செய்துள்ளதோடு குறித்த குழுவிடமிருந்து கைக்குண்டுகள், போதைப் பொருள், வாள்கள், ஆயுதங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் போன்றன மீட்கப்பட்டுள்ளன என்கிறது போலிஸ் படை.
தற்போது இந்தக் குழவில் உள்ள ஒரு சிலர் பயங்கரமான ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் ஒரு சிலரை தேடும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள் என்று போலிஸ்தரப்பு தெரிவிக்கிறது.

Exit mobile version