சுன்னாகம் அனல் மின்நிலைய வளாகத்தில் இயங்கிவருகின்ற இரண்டு அனல் மின்உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தனியாருக்குச் சொந்தமான நொதேர்ண் பவர் பிளான்ற் அதன் ஆரம்ப காலங்களில் சுற்றுச்சூழல் விதிகளைக் கருத்தில் கொள்ளாது கழிவு டீசலை சுத்திகரிக்காமலேயே வெளியேற்றி வந்தமையை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதிவுகளில் இருந்து அறிய முடிகிறது.
இக் காரணங்களால் சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையத்தை மேலும் விரிவாக்குவதற்கு அனுமதி வழங்கக்க்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசனால் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடக்கில் சுன்னாகம் மின்னிலையத்தை நடத்திவருவது எம்.ரி.டி வோக்கஸ் என்ற மலேசிய நிறுவனமே. நோதர்ன் பவர்ஸ் ஐ விலைக்கு வாங்கிக்கொண்ட மலேசிய நிறுவனத்தின் இயக்குனர்களில் பிரதானமானவர் நிரஞ்சன் தேவா ஆதித்யா என்ற நிர்ஜ் தேவா என்பவர். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பிரித்தானியாவின் ஆளும் பழமைவாதக் கட்சியின் உறுப்பினர். பிரித்தானியாவில் அதிகாரக் காய்நகர்தல்களை மேற்கொள்ளும் நிர்ஜ் தேவா என்ற இலங்கை அரசியலிலும் தனது லொபி அரசியல் விளையாட்டுக்களில் கை தேர்ந்தவர்.
யாழ்ப்பாணத்தின் நீரையும் நிலத்தையும் நாசப்படுதி யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியை நீர்வளமற்ற பகுதியாக மாற்றும் இந்த நிறுவனத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூச்சு விடக்கூடத் தயாரில்லை. இந்தியாவும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் வந்து தமிழர்களைக் காப்பாற்றும் எனப் படம் காட்டிய தேசியக் கூட்டமைப்பு, ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மண்ணைத் துவம்சம் செய்யும் போது பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒரு துண்டுக்காகிதமாவது ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி அனுப்பிவைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரில்லை. வெற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி அடுத்த தேர்தலுக்கு வாக்குப்பொறுக்கத் தயராகிறது.
நிர்ஜ் தேவா மலேசிய நிறுவனத்தில்:
http://www.mtdwalkers.com/commercial-building-construction.html
மலேசிய நிறுவனம் சுன்னாகம் மின் நிலையம் குறித்து:
http://www.mtdwalkers.com/walker-sons-co-ltd
மேலதிக வாசிப்பிற்கு: