Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்களின் விகிதம் அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் ஊடகத் தகவல் அறிக்கை

தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை யாழ்ப்பணத்தில் அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் ஊடகத் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்களின் விகிதம் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

அதற்கான காரணங்களும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. இளவயதுக் காதல் தோல்விகள், பரீட்சையில் சித்தியின்மை, அதிகரித்து வரும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள், வறுமை, ஆதரவுக்கு யாருமற்ற அநாதரவான நிலைமை என்பனவே யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்று யாழ். போதனா மருத்துவமனையின் உளநலச் சிகிச்சைப் பிரிவு அறிவுறுத்துகின்றது.

Exit mobile version